Tuesday, August 4, 2015

கனவு நாயகன் திரு Dr .APJ அப்துல் கலாம்

நான் தமிழன் என்று சொல்லி கொள்ளும்போதே
நீ பிறந்த மண்ணில் நானும் பிறந்து வளர்ந்து  வளம் வந்தேன் என்பதில் மேலும் பெருமை கொள்கிறேன்.

நான் பெருந்தலைவர்களை கண்டதில்லை
அவர்களை எல்லாம் உன் உருவத்தில் கண்டேன்
இன்று உனக்கு கிடைத்த மரியாதை அவர்களுக்கு கிடைத்ததைவிட உயர்ந்தது என்று நம்புகிறேன்.

 நீ இயற்கையில் கலக்கும் போது காத்திருந்தேன்
எதாவது அதிசயம் நடவாத என்று
மீண்டும் நீ உயிர் பெற்று விடமாட்டாயா என்று
ஒரு phoneix பறவைபோல் வரமாட்டாயா  என்று

உன் தாய் எந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்தாலோ
உன்னை போன்ற மகனை பெற்று எடுத்து
உலகிற்க்கு கொடுத்து பெருமை சேர்த்து இருக்கிறாள்

நீ சொன்னாய்
ஒரு தாய் கடைசியாக சிரிப்பது அவள் குழந்தையோட முதல் அழுகை சத்தம் கேட்கும் போது தான்  என்று

ஆனால் இன்று உன் தாய் இருந்திருந்தால்  அவள் அழுது இருக்கமாட்டாள்
பெருமிதத்தோடு பெருமையோடு மார் தட்டி இருப்பாள்

இப்போது மட்டும் என்ன....  விண் உலகத்தில் அதையே செய்வாள்
உனக்காக சந்தோசமாக காத்திருப்பாள்
வா மகனே வா என் மடியில் வந்து இபோதோவது ஓய்வெடு என்று கூப்பிட்டிருபாள்.

நீ உன் தாய்க்கு மட்டும் பெருமை சேர்க்கவில்லை
பிறந்த மண்ணுக்கும் தாய் நாட்டுக்கும் மட்டும் பெருமை சேர்க்கவில்லை
ஒரு விதையை ஊன்றிவிட்டு சென்று இருக்கிறாய்
அது இந்த உலகம் அழியும் வரை மரமாக வளர்ந்து நிலைத்து இருக்கும்.

உன் உடல் மறைந்தாலும் உன் ஆன்மா ஒவ்வொரு
இளம் தலைமுறையோடு குடி கொண்டு இருக்கும்
அந்த இளம் தலைமுறை உன் கனவை நிறைவேற்றுவார்கள் என்று
ஆசையோடு காத்திருக்கும் வளர்ந்து  வரும் இளம் தலைமுறையின் தாயின் கண்ணீர் முத்துக்கள்....

நீ விதைத்த விதைக்கு நன்றி......
உன்னை இந்த மண்ணில் கொண்டு வந்த கடவுளுக்கு நன்றி.....